2023 ஆம் ஆண்டு உலக மருந்து அறிக்கையானது, ஐக்கிய நாடுகள் சபையின் போதைப் பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகத்தினால் (UNODC) வெளியிடப் பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் உலகளவில் போதைப் பொருட்களை உட்கொள்ளச் செய்பவர்களின் எண்ணிக்கை 13.2 மில்லியனாக இருந்தது.
இது முந்தைய ஆண்டில் மதிப்பிடப்பட்டதை விட சுமார் 18 சதவீதம் அதிகமாகும்.
உலகளவில், 2021 ஆம் ஆண்டில் 296 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
இது கடந்தப் பத்தாண்டுகளில் பதிவான அளவை விட 23 சதவீதம் அதிகமாகும்.
போதைப் பொருள் பயன்பாடு சார்ந்தப் பல்வேறு குறைபாடுகளால் பாதிக்கப் பட்ட நபர்களின் எண்ணிக்கையானது, 39.5 மில்லியனாக உயர்ந்துள்ளது.
இது கடந்த 10 ஆண்டுகளில் பதிவான அளவை விட 45 சதவீதம் அதிகமாகும்.
உலகளவில் கைப்பற்றப்பட்ட மொத்த மெத்தம்பேட்டமைனில் கிட்டத்தட்ட 90 சதவீதம் ஆனது, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா மற்றும் வட அமெரிக்கா ஆகிய இரண்டு பிராந்தியங்களில் இருந்தே கைப்பற்றப் பட்டுள்ளன.