TNPSC Thervupettagam

உலகளவிலான உவர்தன்மையினால் பாதிக்கப்பட்ட மண்ணின் நிலை 2024

December 22 , 2024 31 days 118 0
  • 2024 ஆம் ஆண்டு சர்வதேச மண் மற்றும் நீர் மன்றம் ஆனது தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்றது.
  • உணவு மற்றும் வேளாண் அமைப்பால் இதற்கு உலகளவிலான உவர்தன்மையினால் பாதிக்கப் பட்ட மண்ணின் நிலை என்ற தலைப்பு வழங்கப் பட்டது.
  • சுமார் 1.4 பில்லியன் ஹெக்டேர் பரப்பிலான நிலம் அல்லது உலக நிலப்பரப்பில் 10.7 சதவீத நிலப்பரப்பானது உவர் தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளது.
  • உவர்தன்மையினால் பாதிக்கப்பட்ட மண் ஆனது மிகப் பெரும்பாலான தாவரங்களின் வளர்ச்சியை மோசமாகப் பாதிக்கின்ற, கரையக்கூடிய உப்புகள் (உவர் தன்மை ஏறிய மண்) அதிக அளவு கொண்ட மண்ணின் ஒரு குறிப்பிட்ட தொகுதியாகும்.
  • தற்போது வரை, ​​ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, சீனா, கஜகஸ்தான், ரஷ்யா, அமெரிக்கா, ஈரான், சூடான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய பத்து நாடுகள் உலகின் உவர்தன்மையினால் பாதிக்கப்பட்ட மண்ணில் சுமார் 70 சதவீதப் பங்கினை கொண்டுள்ளன.
  • உவர்தன்மையினால் பாதிக்கப்பட்ட மண்ணைக் கொண்ட 3 மிகவும் பெரிய பகுதிகள் ஆஸ்திரேலியா (357 மில்லியன் ஹெக்டேர் அல்லது mha), அர்ஜென்டினா (153 mha) மற்றும் கஜகஸ்தான் (94 mha) ஆகிய நாடுகளில் காணப்பட்டன.
  • உவர்தன்மை மற்றும் களர் மண் (சோடியம்) தன்மை ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப் பட்ட 3 நாடுகள் ஓமன் (நாட்டின் நிலப்பரப்பில் 93.5 சதவீதம்), உஸ்பெகிஸ்தான் (92.9 சதவீதம்) மற்றும் ஜோர்டான் (90.6 சதவீதம்) ஆகியனவாகும்.
  • இந்தியா சுமார் 6.72 மில்லியன் ஹெக்டேர் பரப்பில் அல்லது அதன் மொத்தப் புவியியல் பகுதியில் 2.1 சதவீதம் உவர்த் தன்மையினால் பாதிக்கப்பட்டப் பகுதியைக் கொண்து இருந்தது.
  • அதில், சுமார் 2.95 மில்லியன் ஹெக்டேர் உவர் தன்மை மிக்க நிலமாகவும், மீதமுள்ள 3.77 மில்லியன் ஹெக்டேர் களர் நிலமாகவும் இருந்தது.
  • குஜராத் (2.23 mha), உத்தரப் பிரதேசம் (1.37 mha), மகாராஷ்டிரா (0.61 mha), மேற்கு வங்காளம் (0.44 mha) மற்றும் இராஜஸ்தான் (0.38 mha) ஆகியவை நாட்டின் உவர் தன்மையினால் பாதிக்கப்பட்ட மண்ணில் சுமார் 75% பங்கினைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்