TNPSC Thervupettagam

உலகளவிலான குழந்தைப் பருவ நீரிழிவு நோய்ப் பாதிப்பு மற்றும் உயிர் இழப்புகளில் இந்தியா முன்னணி

July 8 , 2023 506 days 264 0
  • 2019 ஆம் ஆண்டில் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான குழந்தைப் பருவ நீரிழிவு நோய்ப் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் இந்தியாவில் பதிவாகியுள்ளது.
  • JAMA Network என்ற இதழில் இந்த ஆய்வறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் மோசமான உடல்நிலை, குறைபாடு மற்றும் முன்கூட்டிய இறப்பு ஆகிய பல காரணிகளினால் ஏற்படும் ஆயுட்கால இழப்பும் (DALY) அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது.
  • உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒரு DALY என்பது ஒரு வருட முழு ஆரோக்கிய வாழ்விற்குச் சமமான இழப்பினைக் குறிக்கிறது.
  • உலகளவில், 2019 ஆம் ஆண்டில், 227,580 குழந்தைப் பருவ நீரிழிவு நோய்ப் பாதிப்புகள், 5,390 உயிரிழப்புகள் மற்றும் 519,117 மோசமான உடல்நிலை, குறைபாடு மற்றும் முன் கூட்டிய இறப்பு ஆகியவற்றினால் ஏற்படும் ஆயுட்கால இழப்புகள் பதிவாகியுள்ளன.
  • இது 1990 ஆம் ஆண்டு முதல் பதிவான அளவிலிருந்து 39.4 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது.
  • 10 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் மத்தியில் மிக அதிக அளவிலான (52.06 சதவீதம்) நோய் பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • 1 முதல் 4 வயது வரையிலான குழந்தைகள் மத்தியில் மிகச்சிறிய அதிகரிப்பு (30.52 சதவீதம்) பதிவாகியுள்ளது.
  • இந்தியாவில் பதிவான நோய்ப் பாதிப்பு விகிதம் 1990 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் முறையே 10.92 மற்றும் 11.68 ஆக இருந்தது.
  • இதற்கு நேர்மாறாக, 1990 ஆம் ஆண்டில் 6,719 ஆக இருந்த உலகளாவிய குழந்தைப் பருவ நீரிழிவு நோய்ப் பாதிப்பினால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையானது 2019 ஆம் ஆண்டில் 5,390 ஆகக் குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்