TNPSC Thervupettagam

உலகளவில் ஏற்புடைய சிந்தனைத் தலைவர் விருது

November 24 , 2018 2112 days 571 0
  • உலகளாவிய இணையதள அமைப்பான ICANN என்ற அமைப்பால் ஆதரிக்கப்படும் UASG (Universal Acceptance Steering Group) என்ற அமைப்பானது ராஜஸ்தானின் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு ‘உலகளவில் ஏற்புடைய சிந்தனைத் தலைவர்’ என்ற விருதை வழங்கியுள்ளது.
  • இந்த விருதானது முதல்வர் மற்றும் மாநில தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ்க்காணும் சீரிய செயல்களை அங்கீகரிக்கும் பொருட்டு வழங்கப்பட்டது.
    • ராஜஸ்தானின் குடிமக்களுக்கு உள்நாட்டு ‘இண்டிக்’ என்ற எழுத்துருவில் மின்னஞ்சல் முகவரியை வழங்கும் ‘ராஜ்மெயில்’ என்ற மின்னஞ்சல் சேவையைத் தொடங்கியதற்காக வழங்கப்பட்டது.
  • இந்த ராஜ்மெயில் தொழில்நுட்பமானது ராஜஸ்தானை அடிப்படையாகக் கொண்ட Data XGen Technologies என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
  • இந்த ஆண்டில் ‘2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த முதல்வர்’ விருதும் வசுந்தரா ராஜேவிற்கு வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்