TNPSC Thervupettagam

உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய வேளாண் முறைகள் (GIAHS)

May 26 , 2020 1648 days 639 0
  • சமீபத்தில் உணவு மற்றும் வேளாண் அமைப்பானது (FAO - Food and Agriculture Organization) சீனா, கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் 4 தேயிலை சாகுபடித் தளங்களை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய வேளாண் முறைகளாகத் தேர்ந்தெடுத்துள்ளது. 
  • GIAHS (Globally Important Agricultural Heritage Systems) ஆனது வேளாண் பாரம்பரிய முறைகளைப் பாதுகாத்து, ஆதரவளிப்பதற்காக FAOவினால் தொடங்கப் பட்டதாகும். 
  • GIAHS ஆனது வேளாண் பன்முகத் தன்மை, இடர் தாங்கும் சூழல் அமைப்புகள் மற்றும் மதிப்புமிக்க கலாச்சாரப் பாரம்பரியங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ள  அழகியல் சார்ந்த தலைசிறந்த நில அமைப்புகளாகும்.
  • இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 3 GIAHS தளங்கள் பின்வருமாறு:
    • கேரளாவில் கடல் மட்டத்திற்குக் கீழே மேற்கொள்ளப் படும் குட்டநாடு வேளாண் முறை
    • ஒடிசாவின் கோராபுட் பாரம்பரிய வேளாண்மை
    • காஷ்மீரின் பாம்பூர் குங்குமப்பூ பாரம்பரிய வேளாண்மை 
  • FAO என்பது பட்டினியை ஒழித்தல், ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தல் ஆகியவற்றிற்கான சர்வதேச அளவிலான முயற்சிகளை வழிநடத்தும் ஐக்கிய நாடுகளின் ஒரு சிறப்பு நிறுவனமாகும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்