2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் சேவைகள் என்ற ஒரு ஏற்றுமதி இலக்கை எட்ட இந்தியா தயாராக உள்ளது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்துதலாக 'சேவைகள்' துறையை அவர் குறிப்பிட்டார்.
சேவைத் துறை கிட்டத்தட்ட 2.6 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதோடு இந்தியாவின் மொத்த உலகளாவிய ஏற்றுமதியில் சுமார் 40 சதவீத பங்களிப்பையும் வழங்குகிறது.
2020-21 ஆம் ஆண்டில் சேவை வர்த்தக உபரி 89 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருப்பதோடு அது அந்நிய நேரடி முதலீட்டின் ஒரு மிகப்பெரிய பெறுநராக உள்ளது.
டெல்லியில் நடைபெற்ற இந்த மாநாட்டின் கருத்துரு 'India Serves: Exploring Potential Growth Sectors Beyond IT/ITes' என்பதாகும்.