கோர்ஸெரா என்ற நிறுவனத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான உலகளாவியத் திறன் அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்தியாவின் ஒட்டு மொத்தத் திறன் வளர்ச்சியானது உலக அளவில் நான்கு இடங்கள் வரை சரிந்து, 68வது இடத்தில் உள்ளது.
ஆசிய அளவில் இந்தியா 19வது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் தொழில்நுட்பத் திறன் வளர்ச்சியானது ஆறு இடங்கள் முன்னேறியதன் மூலம் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளதையடுத்து அதன் அளவு 38 என்ற சதவீதத்திலிருந்து 46% ஆக உயர்ந்துள்ளது.
2021 ஆம் ஆண்டில் 38% ஆக இருந்த தரவு அறிவியல் வளர்ச்சியானது 2022 ஆம் ஆண்டில் 26% ஆகக் குறைந்துள்ளது.
இதனால், இந்தப் பிரிவில் இந்தியா 12வது இடத்திற்குத் தள்ளப்படுவதற்கு இது வழி வகுத்தது.
இந்திய மாநிலங்களில், திறன் வளர்ச்சிஅடிப்படையில் மேற்கு வங்காளம் முன்னிலை வகிக்கிறது.
மேற்கு வங்காளம் மாநிலமானது மூன்று களங்களிலும் இடம் பெற்ற ஒரு மாநிலமாகத்தர வரிசையில் இடம் பெற்றுள்ளது.