TNPSC Thervupettagam

உலகளாவியத் திறன் போட்டிக் குறியீடு 2020

January 29 , 2020 1761 days 925 0
  • உலக பொருளாதார மன்றத்தின் (WEF - World Economic Forum) வருடாந்திர கூட்டத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான உலகளாவியத் திறன் போட்டிக் குறியீடானது (Global Talent Competitive Index - GTCI) வெளியிடப் பட்டுள்ளது.
  • INSEAD வணிகப் பள்ளியானது கூகுள் மற்றும் அடெக்கோ குழுமத்தின் உதவியுடன் GTCI அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்தக் குறியீட்டில் இந்த ஆண்டு இந்தியா எட்டு இடங்கள் முன்னேறி, 72வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்தக் குறியீட்டில் சுவிட்சர்லாந்து முதலிடத்தையும் அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களையும் பிடித்துள்ளன.

GTCI பற்றி

  • GTCI ஆனது 2013 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • GTCI என்பது திறமைகளுக்காகப் போட்டியிடும் நாடுகளின் திறனை அளவிடும் ஒரு வருடாந்திரத்  தரப்படுத்தல் அறிக்கையாகும்.
  • GTCI ஆனது ஈர்த்தல், தக்க வைத்தல், இயக்குதல், வளர்தல், தொழில் திறன் மற்றும் உலகளாவிய அறிவு திறன் ஆகிய ஆறு குறிகாட்டிகளின் அடிப்படையில் நாடுகளைத் தரவரிசைப் படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்