உலகத் தொடக்க நிறுவனச் சூழலமைவு அறிக்கையில், மலிவான திறன் கொண்ட நாடுகள் பிரிவில் ஆசியாவிலேயே கேரளா முதலிடம் பிடித்துள்ளது.
இந்த அறிக்கையில் உலகளாவியத் தரவரிசையில் இந்த மாநிலம் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.
இது கொள்கை ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஸ்டார்ட்அப் ஜீனோம் மற்றும் உலகத் தொழில்முனைவோர் கட்டமைப்பு ஆகியவற்றால் கூட்டாக இணைந்து வெளியிடப் பட்ட அறிக்கையாகும்.
2020 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட முதல் உலகத் தொடக்க நிறுவனச் சூழலமைவு அறிக்கையில், கேரளா ஆசியாவில் 5வது இடத்திலும், உலகளவில் 20வது இடத்திலும் இருந்தது.
இந்த அறிக்கையில் பெங்களூரு 22வது இடத்திலும், டெல்லி 26வது இடத்திலும், மும்பை 36வது இடத்திலும் உள்ளன.