TNPSC Thervupettagam

உலகளாவியப் பல்பரிமாண வறுமைக் குறியீடு 2024

October 23 , 2024 8 days 218 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு (UNDP) மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முன்னெடுப்பு அமைப்பினால் சமீபத்திய உலகளாவியப் பல் பரிமாண வறுமைக் குறியீட்டு (MPI) அறிக்கையானது வெளியிடப் பட்டது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, 1.1 பில்லியன் மக்கள் உலகளவில் மிக கடுமையான வறுமை நிலையில் வாழ்கின்ற நிலையில் இவர்களில் மிகவும் பாதிக்கும் மேற்பட்டோர் சிறார்கள் ஆவர்.
  • இந்தியாவில் 234 மில்லியன் மக்கள் வறுமையில் வாழ்கின்றனர் என்பதோடு இது நடுத்தர மனித மேம்பாட்டுக் குறியீடு நிலை ஆகும்.
  • உலகளவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வறுமையில் வாடும் நிலையில் உள்ள ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
  • மற்ற நான்கு நாடுகள் பாகிஸ்தான் (93 மில்லியன்), எத்தியோப்பியா (86 மில்லியன்), நைஜீரியா (74 மில்லியன்) மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு (66 மில்லியன்) ஆகியனவாகும் என்பதோடு இவை அனைத்தும் மிக குறைவான மனித மேம்பாட்டுக் குறியீடு கொண்ட நாடுகள் ஆகும்.
  • உலகிலுள்ள ஏழைகளில் 48.1% பேர் இந்த ஐந்து நாடுகளில் வாழ்கின்றனர்.
  • 1.1 பில்லியன் ஏழைகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் (584 மில்லியன்) என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
  • உலகளவில், 27.9 சதவீதக் குழந்தைகள் வறுமையில் வாழ்கின்றனர் என்பதோடு இளம் பருவத்தினர் மத்தியில் இது 13.5 சதவீதமாக உள்ளது.
  • தெற்காசியாவில் ஏழ்மை நிலையில் உள்ள 272 மில்லியன் குறைந்த பட்சம் ஒரு ஊட்டச் சத்து குறைபாடுள்ள நபர் கொண்ட வீடுகளிலும், ஏழ்மை நிலையில் உள்ள சுமார்  256 மில்லியன் மக்கள் ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதிகளிலும் வாழ்கின்றனர்.
  • ஏழ்மை நிலையில் உள்ள சுமார் 83.7 சதவீத மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்