TNPSC Thervupettagam

உலகளாவியப் பாலின இடைவெளி அறிக்கை

April 4 , 2021 1331 days 1378 0
  • உலகப் பொருளாதார மன்றமானது 2021 ஆம் ஆண்டிற்கான உலகளாவியப் பாலின இடைவெளி அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • இந்தத் தரவரிசையில் இந்தியாவின் நிலை 28 இடங்கள் கீழ் சென்றுள்ளது.
  • இக்குறியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள 156 நாடுகளில் இந்தியா 140வது இடத்தில் உள்ளது.
  • இத்துடன் இந்தியாவானது தெற்காசியாவின் மூன்றாவது மோசமான நிலையிலுள்ள நாடு எனும் நிலையை அடைந்துள்ளது.
  • மேலும் பொருளாதாரப் பங்கேற்பு மற்றும் வாய்ப்பு ஆகிய துணைக் குறியீட்டிலும் சரிவைக் கண்டுள்ளது.
  • இந்தப் பரிமாணங்களில் இந்தியாவின் பாலின இடைவெளி இந்த ஆண்டில் 3% விரிவடைந்துள்ளதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
  • இது இந்நாள் வரையில் 32.6% என்ற அளவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • 2019 ஆம் ஆண்டில் 23.1% ஆக இருந்த பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டில் 9.1% ஆக குறைந்துள்ளது.
  • பெண் தொழிலாளர் பங்கேற்பு வீதம் 24.8% என்ற அளவிலிருந்து 22.3% என்ற அளவிற்குக் குறைந்ததும் இந்தியாவைப் பின்னடைவிற்கு இட்டுச் சென்ற காரணிகளில் ஒன்று ஆகும்.
  • தொழில்முறை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பெண்களின் பங்கு 29.2% என்ற அளவாக குறைந்துள்ளது.
  • உயர்மட்டப் பணி நிலை மற்றும்  மேலாண்மை நிலைகளிலும் பெண்களின் பங்கு குறைவாக உள்ளது.
  • இவற்றுள் 14.6% என்ற அளவிற்கு மட்டுமே பெண்கள் பொறுப்பு வகிக்கின்றனர்.
  • மேலும் 8.9% நிறுவனங்கள் மட்டுமே உயர்மட்ட அளவில்  பெண் மேலாண்மை அதிகாரிகளைக் கொண்டு இயங்குகின்றன.
  • இந்தியாவில் பெண்கள் ஈட்டும் வருவாய் ஆண்களின் வருவாயில் 1/5 பங்கு மட்டுமே உள்ளது.
  • இதுவே உலகளாவிய பாலினக் குறியீட்டில் இந்தியா கடைசி 10 இடங்களில் இருப்பதற்குக் காரணமாகும்.

குறிப்பு

  • இந்தியாவின் அண்டை நாடுகளில் நேபாளம் 106வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 156வது இடத்திலும், பாகிஸ்தான் 153வது இடத்திலும், இலங்கை 116வது இடத்திலும் மற்றும் பூடான்  130வது இடத்திலும் உள்ளன.
  • இந்தப் பகுதிகளில் ஒட்டு மொத்த பாலின இடைவெளியானது 62.3% என்ற அளவிற்கு உள்ளது.
  • தெற்காசியப் பகுதியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகள் மட்டுமே இந்தியாவைக் விட குறைவான தரவரிசையில் இடம் பெற்றுள்ளன.
  • 12வது முறையாக ஐஸ்லாந்து ஆனது இந்தக் குறியீட்டில் முதலிடத்தில் உள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் 153 நாடுகளுள் இந்தியா 112வது இடத்தில் இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்