TNPSC Thervupettagam

உலகளாவியப் பொருளாதாரத் தாங்குதிறன்

January 17 , 2024 313 days 289 0
  • வீழ்ச்சி நிலையில் இருந்து 2021 ஆம் ஆண்டில் 6.2 சதவீதத்திற்கு உயர்ந்த பிறகு, உலக வங்கியின் உலக வளர்ச்சி மதிப்பீடுகள் 2022 ஆம் ஆண்டில் 3.0 சதவீதமாகவும், பின்னர் 2023 ஆம் ஆண்டில் 2.6 சதவீதமாகவும் இருக்கும் என்று மதிப்பிடுகிறது.
  • 2025 ஆம் ஆண்டில் 2.7 சதவீதமாக உயரும் முன், 2024 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி மேலும் 2.4 சதவீதமாகக் குறையும் என தற்போது கணித்து உள்ளது.
  • இது 2010 ஆம் ஆண்டுகளில் காணப்பட்ட 3.1 சதவீத சராசரி வளர்ச்சியை விட மிகவும் குறைவாக உள்ளது.
  • பெரும்பாலான நாடுகள் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் COVID-19 பெருந் தொற்றிற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மெதுவான வளர்ச்சி விகிதத்தில் வளரும்.
  • 2023-24 ஆம் ஆண்டில் 6.3 சதவீதமாக இருந்த இந்தியாவின் வளர்ச்சியானது 2024-25 ஆம் ஆண்டில் 6.4 சதவீதமாகவும், 2025-26 ஆம் ஆண்டில் 6.5 சதவீதமாகவும் உயர்ந்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்