உலகளாவியப் பொருளாதார வாய்ப்புகள் அறிக்கை – உலக வங்கி
June 13 , 2021
1263 days
546
- இந்த அறிக்கையின்படி 2021 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரமானது 5.6% வரை வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
- சில பெரிய நாடுகளின் வலிமையான மீட்சியின் காரணமாக, கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவிலான மந்த நிலைக்குப் பிந்தைய விரைவான வளர்ச்சி இதுவாக இருக்கும்.
- 2021 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியானது 6.8% ஆக இருக்குமென கணிக்கப் பட்டுள்ளது.
- சீனாவின் வளர்ச்சி 8.5% ஆக இருக்கும்.
- வளர்ந்து வரும் நாடுகளின் குழுமத்தில் சீனாவைத் தவிர மற்ற நாடுகளின் வளர்ச்சியானது 4.4% என்ற அளவிலான மீட்சியினைப் பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.
Post Views:
546