TNPSC Thervupettagam

உலகளாவியப் பொருளாதார வாய்ப்பு அறிக்கை

January 15 , 2020 1684 days 517 0
  • உலக வங்கியானது 2020 ஆம் ஆண்டிற்கான உலகளாவியப் பொருளாதார வாய்ப்பு என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • அதன் முன்கணிப்பின்படி, உலக நாடுகளானவை  2.5% என்ற விகிதத்தில் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • வளரும் நாடுகளில் உள்ள வளர்ந்து வரும் சந்தைகள் குறித்த அறிக்கையின்படி அவற்றின் வளர்ச்சியானது அதிகரிக்குமே அன்றி மற்றவற்றின் வளர்ச்சியானது (மற்ற நாடுகள்) அதிகரிக்காது.
  • இந்த அறிக்கையின் படி தெற்காசியாவின் வளர்ச்சியானது 2020 ஆம் ஆண்டில் 5.5% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • இந்த அறிக்கையானது இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை 5% என்று கணித்துள்ளது. மேலும் அடுத்து வரும் ஆண்டில் இந்தியா 5.5% வளர்ச்சி விகிதத்தை அடையும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
  • 2020 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வளர்ச்சியானது 1.8% ஆக அதிகரிக்கும் என்றும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வளர்ச்சியானது 1% என்ற அளவில் குறையும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்