உலகளாவியப் போக்குகள் அறிக்கை: 2023 ஆம் ஆண்டில் பதிவான கட்டாய புலம் பெயர்வு
June 18 , 2024 158 days 164 0
2023 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு மே மாதம் வரை உலகளவில் 120 மில்லியன் மக்கள் வலுக்கட்டாயமாக புலம்பெயர்ந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமையின் (UNHCR) உலகளாவியப் போக்குகள் அறிக்கையில் இந்தப் புதிய தரவு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் இறுதியில் 117.3 மில்லியன் மக்கள் வலுக்கட்டாயம் காரணமாக புலம்பெயர்ந்துள்ளனர்.
மே மாதத்தில் உலகளவில் சுமார் 120 மில்லியன் மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர் என்ற நிலையில் இது 2022 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களை விட சுமார் 10% அதிகமாகும்.
இது உலக மக்கள் தொகையில் சுமார் 1.5% ஆகும்.
இந்த ஆண்டு, அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து 12வது ஆண்டாக, 114 முதல் 120 மில்லியனாக அதிகரித்துள்ளது.
வெறும் ஐந்து நாடுகளில் அதிக புதிய புகலிட கோரல் விண்ணப்பங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன என்ற நிலையில் அவற்றுள் 1.2 மில்லியன் விண்ணப்பங்களுடன் மிகவும் பெரும்பாலானவை அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதைத் தொடர்ந்து 329,100 பதிவுகளுடன் ஜெர்மனியும் அதனைத் தொடர்ந்து எகிப்து, ஸ்பெயின் மற்றும் கனடா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.