TNPSC Thervupettagam

உலகளாவிய அந்நிய நேரடி முதலீடு

May 9 , 2021 1170 days 541 0
  • உலகளாவிய அந்நிய நேரடி முதலீடானது (Foreign Direct Investment - FDI) 2020 ஆம் ஆண்டில் 38% வரை குறைந்துள்ளது.
  • இது 15 ஆண்டுகளில் இல்லாத அளவிலான சரிவாகும் (2005 ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட சரிவிலேயே மிகவும் சரிவானது).
  • பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பினால் (OECD – Organization for Economic Cooperationa and Development) வெளியிடப்பட்ட புதிய தரவுத் தொகுப்பின் அடிப்படையில் இது கணக்கிடப்பட்டுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் 64 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டுடன் அந்நிய நேரடி முதலீட்டை அதிகளவில் பெறும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா மாறியுள்ளது.
  • அமெரிக்காவை (177 பில்லியன் அமெரிக்க டாலர்) விஞ்சிய சீன நாடானது (212 பில்லியன் அமெரிக்க டாலர்) அந்நிய நேரடி முதலீட்டை அதிகளவில் பெறும் பெரிய நாடாக உருவெடுத்துள்ளது.
  • 4 ஆம் இடத்தில் லக்சம்பெர்க் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்