உலகப் பொருளாதார மன்றம் (WEF) ஆனது, அதன் சமீபத்திய 2025 ஆம் ஆண்டு உலகளாவிய அபாய அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
தவறான தகவல் மற்றும் பொய்யான தகவல் ஆனது அடுத்து வரவிருக்கும் இரண்டு ஆண்டுகளில் மிகவும் கடுமையான உலகளாவிய அபாயமாக பார்க்கப்படுகிறது.
தீவிர வானிலை நிகழ்வுகள் இரண்டாவது கடுமையான அபாயமாக உள்ளன என்ற ஒரு நிலையில் அரசு அடிப்படையிலான ஆயுத மோதல் மூன்றாவது பெரிய அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
அடுத்தப் பத்தாண்டுகளில், தீவிர வானிலை நிகழ்வுகள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன.
அதைத் தொடர்ந்து பல்லுயிர்ப் பெருக்க இழப்பு, பூமியின் அமைப்புகளில் மிகவும் முக்கியமான மாற்றம் மற்றும் இயற்கை வளங்களின் மீதான பெரும் பற்றாக்குறை ஆகியவை உள்ளன.
2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல் அறிக்கையிலிருந்து, தீவிர வானிலை நிகழ்வுகள் "சுற்றுச்சூழல் சார் அபாயங்கள்" என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வுகள் ஆனது 2014 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் முதல் ஆறு அபாயங்களில் ஒன்றாக முன்னேறியுள்ளன.
இது 2017 முதல் 2020 ஆம் ஆண்டு வரை பெருமளவிலான உலகளாவிய அபாயமாக தர வரிசைப்படுத்தப்பட்டு 2024 ஆம் ஆண்டில் மீண்டும் அந்த நிலையைப் பெற்றுள்ளது.
குறுகிய காலத்தில் (2025-2027), தீவிர வானிலை நிகழ்வுகள் ஆனது இரண்டாவது மிகக் கடுமையான உலகளாவிய அபாயமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வுகள் தற்போது 28 நாடுகளில் முதல் ஐந்து குறுகிய கால அபாயங்களுள் பட்டியலிடப் பட்டுள்ளன என்பதோடு இது கடந்த ஆண்டு 24 நாடுகளில் பட்டியலிடப் பட்டது.