TNPSC Thervupettagam

உலகளாவிய அபாயம் குறித்த அறிக்கை 2025

January 21 , 2025 6 hrs 0 min 54 0
  • உலகப் பொருளாதார மன்றம் (WEF) ஆனது, அதன் சமீபத்திய 2025 ஆம் ஆண்டு உலகளாவிய அபாய அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • தவறான தகவல் மற்றும் பொய்யான தகவல் ஆனது அடுத்து வரவிருக்கும் இரண்டு ஆண்டுகளில் மிகவும் கடுமையான உலகளாவிய அபாயமாக பார்க்கப்படுகிறது.
  • தீவிர வானிலை நிகழ்வுகள் இரண்டாவது கடுமையான அபாயமாக உள்ளன என்ற ஒரு நிலையில் அரசு அடிப்படையிலான ஆயுத மோதல் மூன்றாவது பெரிய அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
  • அடுத்தப் பத்தாண்டுகளில், தீவிர வானிலை நிகழ்வுகள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன.
  • அதைத் தொடர்ந்து பல்லுயிர்ப் பெருக்க இழப்பு, பூமியின் அமைப்புகளில் மிகவும் முக்கியமான மாற்றம் மற்றும் இயற்கை வளங்களின் மீதான பெரும் பற்றாக்குறை ஆகியவை உள்ளன.
  • 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல் அறிக்கையிலிருந்து, தீவிர வானிலை நிகழ்வுகள் "சுற்றுச்சூழல் சார் அபாயங்கள்" என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • இந்த நிகழ்வுகள் ஆனது 2014 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் முதல் ஆறு அபாயங்களில் ஒன்றாக முன்னேறியுள்ளன.
  • இது 2017 முதல் 2020 ஆம் ஆண்டு வரை பெருமளவிலான உலகளாவிய அபாயமாக தர வரிசைப்படுத்தப்பட்டு 2024 ஆம் ஆண்டில் மீண்டும் அந்த நிலையைப் பெற்றுள்ளது.
  • குறுகிய காலத்தில் (2025-2027), தீவிர வானிலை நிகழ்வுகள் ஆனது இரண்டாவது மிகக் கடுமையான உலகளாவிய அபாயமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
  • இந்த நிகழ்வுகள் தற்போது 28 நாடுகளில் முதல் ஐந்து குறுகிய கால அபாயங்களுள் பட்டியலிடப் பட்டுள்ளன என்பதோடு இது கடந்த ஆண்டு 24 நாடுகளில் பட்டியலிடப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்