உலக அறிவுசார் சொத்து அமைப்பின் உலக அறிவுசார் சொத்து குறிகாட்டிகள் (WIPI) என்ற அறிக்கையானது, 2021 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் உள்ள புதுமைப் படைப்பாளர்கள் 3.4 மில்லியன் காப்புரிமை விண்ணப்பங்களைத் தாக்கல் செய்து உள்ளனர் என்று குறிப்பிடுகிறது.
இது முந்தைய ஆண்டை விட 3.6 சதவீதம் அதிகமாக உள்ள நிலையில், உலகளவில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களில் 67.6 சதவீத விண்ணப்பங்கள் ஆசியாவில் உள்ள அலுவலகங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
2021 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதிவுகள் இந்தியா, சீனா மற்றும் தென் கொரியா ஆகிய ஆசிய நாடுகளில் தான் அதிகம் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இந்தியா (+5.5 சதவீதம்), சீனா (+5.5 சதவீதம்) மற்றும் கொரியக் குடியரசு (+2.5 சதவீதம்) ஆகியவற்றில் உள்நாட்டுக் காப்புரிமைத் தாக்கல்கள் அதிகளவில் பதிவாகியுள்ளது.
அமெரிக்கா (-1.2 சதவீதம்), ஜப்பான் (-1.7 சதவீதம்) மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் (-3.9 சதவீதம்) உள்நாட்டுக் காப்புரிமைச் செயல்பாடுகள் 2021 ஆம் ஆண்டில் குறைந்து உள்ளது.