ஐக்கிய நாடுகள் உணவுப் பாதுகாப்புத் திட்டமானது (WFP - World Food Programmes) “உலகளாவிய அளவில் பள்ளிகளில் உணவளித்தல் நிலை” என்ற ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய அளவில் பள்ளிகளில் உணவளித்தல் நிலைகுறித்த ஆய்வை அளிக்கின்றது.
இது முதன்முதலில் 2013 ஆம் ஆண்டில் WFP அமைப்பால் வெளியிடப்பட்டது.
2020 ஆம் ஆண்டுப் பதிப்பானது 2013 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மாற்றம் அடைந்துள்ள நிலையை ஆய்வு செய்கின்றது.
இது கல்வி மற்றும் ஆரோக்கிய நலப் பலன் அளிக்கும் திட்டங்களின் ஆதாரம் மற்றும் புரிதலில் உள்ள மேம்பாடுகள் குறித்த திருத்தப்பட்ட தகவல்களை அளிக்கின்றது.
நோய்த் தொற்று மிகக் கடுமையாக இருந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், 199 நாடுகள் தங்களது பள்ளிகளை மூடி விட்டன.
இதன் காரணமாக ஏறத்தாழ 370 மில்லியன் குழந்தைகள் பள்ளியில் வழங்கப்படும் ஊட்டச்சத்து மிக்க உணவின்றித் தவித்தனர்.