TNPSC Thervupettagam

உலகளாவிய இணையவழிக் குற்றம் தொடர்பான தீர்மானம்

December 1 , 2019 1728 days 557 0
  • உலகளாவிய இணையவழிக் குற்றம் தொடர்பாக ரஷ்யா முன்மொழிந்த ஒரு தீர்மானத்தை ஐ.நா குழு நிறைவேற்றியுள்ளது.
  • இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான இறுதி பொதுச் சபை வாக்கெடுப்பானது டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.
  • அமெரிக்கா முன்மொழிந்த புடாபெஸ்ட் ஒப்பந்தத்திற்கு மாற்றாக இந்த ஒப்பந்தம் முன்மொழியப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தத் தீர்மானத்திற்கு சீனா, வட கொரியா, கியூபா, நிகரகுவா, வெனிசுலா மற்றும் சிரியா ஆகிய நாடுகள் நிதியுதவி அளித்துள்ளன.
  • ரஷ்யா முன்மொழிந்த இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியாவும் வாக்களிக்கின்றது.
  • ஐரோப்பா முன்மொழிந்த புடாபெஸ்ட் மாநாட்டில் உறுப்பினர் அல்லாதவர் என்ற வகையில் இந்தியா தனது நிலைப்பாட்டை நிலைநிறுத்தியுள்ளது.

புடாபெஸ்ட் மாநாடு பற்றி

  • இணையவழிக் குற்றம் தொடர்பான புடாபெஸ்ட் மாநாடு அல்லது 2001 ஆம் ஆண்டு புடாபெஸ்ட் மாநாடு என்று அழைக்கப்படும் இணையவழிக் குற்றம் குறித்த மாநாடானது இணையம் மற்றும் கணினி வழிக் குற்றங்களை நிவர்த்தி செய்ய முற்படும் முதலாவது சர்வதேச ஒப்பந்தமாகும்.
  • இது 2004 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.
  • இது பிரான்சில் உள்ள ஐரோப்பிய மன்றத்தால் வரையறுக்கப்பட்டது.
  • ஐரோப்பிய மன்றத்தின் பார்வையாளர் நாடுகளான கனடா, ஜப்பான், தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் பங்களிப்பின் மூலம் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
  • ஐரோப்பிய மன்றத்தில் உறுப்பினர்களாக இல்லாத நாடுகளுக்குக் கூட இது ஒப்புதல் அளிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்