TNPSC Thervupettagam

உலகளாவிய இணையவெளிப் பாதுகாப்புக் குறியீடு 2024

September 21 , 2024 63 days 146 0
  • சர்வதேசத் தொலைத்தொடர்பு ஒன்றியமானது (ITU) வெளியிட்ட 2024 ஆம் ஆண்டு உலகளாவிய இணையவெளிப் பாதுகாப்புக் குறியீட்டில் (GCI) இந்தியா முதல் அடுக்கு நிலைக்கு முன்னேறியுள்ளது.
  • இந்த அறிக்கையானது 46 நாடுகளை மொத்தம் ஐந்து அடுக்குகளில் மிக உயரிய நிலையான முதல் அடுக்கு நிலையில் தரவரிசைப்படுத்தியுள்ளது.
  • இது ஐந்து இணையப் பாதுகாப்பு அம்சங்களிலும் வலுவான உறுதிப்பாட்டினை வெளிப்படுத்தும் "முன்மாதிரியாக விளங்கும்" நாடுகளுக்காக என்று இந்த தரவரிசை ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இணைய வெளிப் பாதுகாப்பின் அடிப்படையில் பெரும்பாலான நாடுகள் "நிலைப் படுத்திக் கொண்டு வரும் நிலை" (அடுக்கு 3) அல்லது "பரிணமித்து வரும் நிலையில்" (அடுக்கு 4) உள்ளன.
  • இந்தியாவில் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (2000) மற்றும் தனிநபர் டிஜிட்டல் தரவுப் பாதுகாப்பு மசோதா (2022) போன்ற வலுவான சட்ட நடவடிக்கைகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்