TNPSC Thervupettagam

உலகளாவிய உணவுக் கொள்கை அறிக்கை 2022

May 19 , 2022 793 days 433 0
  • சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனமானது, 2022 ஆம் ஆண்டின் உலகளாவிய உணவுக் கொள்கை அறிக்கையினை வெளியிட்டது.
  • 2030 ஆம் ஆண்டில் இந்தியாவின் உணவு உற்பத்தி 16% குறையலாம் என்றும், பருவ நிலை மாற்றத்தின் காரணமாக பட்டினியால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை 23% அதிகரிக்கலாம் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
  • 2030 ஆம் ஆண்டில்  பட்டினியால் பாதிக்கப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை  73.9 மில்லியனாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • இந்தியா முழுவதும் நிலவும் சராசரி வெப்பநிலையானது 2100 ஆம் ஆண்டில் 2.4°C முதல் 4.4°C வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
  • இதே போல், இந்தியாவில் வீசும் கோடை வெப்ப அலைகள் 2100 ஆம் ஆண்டில் மூன்று மடங்காக உயரும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது.
  • பருவநிலை மாற்றத்தின் பின்னணியில் 2050 ஆம் ஆண்டில் உலகளாவிய உணவு உற்பத்தி 2010 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட சுமார் 60% அதிகரிக்கும்.
  • கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்காவில் 28 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உட்பட உலகளவில், பருவநிலை மாற்றத்தின் காரணமாக சுமார் 70 மில்லியன் மக்கள் பசியால் பாதிக்கப் படுவார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்