சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனமானது, 2022 ஆம் ஆண்டின் உலகளாவிய உணவுக் கொள்கை அறிக்கையினை வெளியிட்டது.
2030 ஆம் ஆண்டில் இந்தியாவின் உணவு உற்பத்தி 16% குறையலாம் என்றும், பருவ நிலை மாற்றத்தின் காரணமாக பட்டினியால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை 23% அதிகரிக்கலாம் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
2030 ஆம் ஆண்டில் பட்டினியால் பாதிக்கப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை 73.9 மில்லியனாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்தியா முழுவதும் நிலவும் சராசரி வெப்பநிலையானது 2100 ஆம் ஆண்டில் 2.4°C முதல் 4.4°C வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதே போல், இந்தியாவில் வீசும் கோடை வெப்ப அலைகள் 2100 ஆம் ஆண்டில் மூன்று மடங்காக உயரும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தின் பின்னணியில் 2050 ஆம் ஆண்டில் உலகளாவிய உணவு உற்பத்தி 2010 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட சுமார் 60% அதிகரிக்கும்.
கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்காவில் 28 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உட்பட உலகளவில், பருவநிலை மாற்றத்தின் காரணமாக சுமார் 70 மில்லியன் மக்கள் பசியால் பாதிக்கப் படுவார்கள்.