TNPSC Thervupettagam

உலகளாவிய உணவுக் கொள்கை அறிக்கை 2024

June 4 , 2024 172 days 272 0
  • உலகளாவிய உணவுக் கொள்கை அறிக்கை 2024: ஆரோக்கியமான உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கான உணவு முறைகள் என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையானது சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தினால் (IFPRI) வெளியிடப் பட்டு உள்ளது.
  • தவறான உணவு முறையின் விளைவாக, இந்தியாவின் மக்கள் தொகையில் 16.6 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்தியாவில், 2011 ஆம் ஆண்டில் சுமார் 15.4% ஆக இருந்த ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் தொகை விகிதம் ஆனது 2021 ஆம் ஆண்டிற்குள் 16.6% ஆக அதிகரித்துள்ளது.
  • இந்திய மக்கள் தொகையில் குறைந்தது 38 சதவீதம் பேர் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொண்டுள்ளனர் என்ற அதே சமயம் 28 சதவீதம் பேர் மட்டுமே பரிந்துரைக்கப் பட்ட ஐந்து உணவு வகைகளையும் உட்கொண்டுள்ளனர்.
  • 2006 ஆம் ஆண்டில் 12.9% ஆக இருந்த, வயது வந்தோர்களில் பதிவான அதிக உடல் எடை பாதிப்பு ஆனது 2016 ஆம் ஆண்டில் 16.4% ஆக அதிகரித்துள்ளது.
  • இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகளில் அதிக எடை, உடல் பருமன் மற்றும் அது தொடர்புடைய தொற்றா நோய்களின் பரவல் அதிகரித்துள்ளது.
  • இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்கள், அதிலும் மிக அதிகமாக ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் உள்ளவர்கள்  ஆரோக்கியமான உணவை வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்