TNPSC Thervupettagam

உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி

April 18 , 2024 92 days 173 0
  • இந்திய அரசானது சிங்கப்பூர், வங்காளதேசம், இத்தாலி, அமெரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா, மொரிஷியஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியினை தொடங்கியுள்ளது.
  • உயிரி எரிபொருளின் மேம்பாடு மற்றும் அதன் பயன்பாட்டினை அதிகளவில் ஏற்பதற்காக உலகளாவிய ஒத்துழைப்பினை ஊக்குவிப்பதன் மூலம் இது ஒரு வினையூக்கி தளமாக செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலக வங்கி, ஆசிய மேம்பாட்டு வங்கி, உலகப் பொருளாதார மன்றம், சர்வதேச எரிசக்தி முகமை போன்ற சர்வதேச அமைப்புகளும் இதில் அடங்கும்.
  • 3வது பெரிய கச்சா எண்ணெய் நுகர்வோர் ஆக உள்ள இந்திய நாடு எரிசக்தி இறக்குமதியைப் பெரிதும் சார்ந்துள்ளது.
  • உயிரி எத்தனால் மற்றும் உயிரி டீசல் ஆகிய இரண்டும் இந்தியச் சந்தையில் 5% என்ற கூட்டு வருடாந்திர வளர்ச்சி வீதத்தில் (CAGR) அதிகரிக்கும் என்று மிகவும் எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்