TNPSC Thervupettagam

உலகளாவிய உள்நாட்டு இடப்பெயர்வு பற்றிய அறிக்கை 2023

May 18 , 2023 557 days 334 0
  • உள்நாட்டு இடப்பெயர்வு கண்காணிப்பு மையம் என்ற அமைப்பானது இந்த வருடாந்திர அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டின் இறுதியில் உலகம் முழுவதுமான உள்நாட்டில் இடம் பெயர்ந்த நபர்களின் எண்ணிக்கை (IDPs) 71.1 மில்லியனை எட்டியுள்ளது.
  • இது முந்தைய ஆண்டை விட 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • இந்தியாவில் 2.5 மில்லியன் இடப்பெயர்வுகளுடன் உலகின் நான்காவது அதிக அளவில் பேரிடர் சார்ந்த இடப்பெயர்வானது பதிவாகியுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில், 8.16 மில்லியன் பேரிடர் சார்ந்த இடப்பெயர்வுகளுடன் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இடப்பெயர்வானது பாகிஸ்தானில் பதிவாகியுள்ளது.
  • 5.44 மில்லியன் இடப்பெயர்வுகளுடன் பிலிப்பைன்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • 3.63 மில்லியனுடன் சீனா மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • 2.4 மில்லியனுடன் நைஜீரியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
  • உக்ரைனில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக, வேகமாக கைமாறி வரும் பகுதிகளில் இருந்து மக்கள் மீண்டும் மீண்டும் வெளியேறியதால், கிட்டத்தட்ட 17 மில்லியன் இடப் பெயர்வுகளை அது தூண்டியது.
  • மோதல் மற்றும் வன்முறை நிகழ்வானது, உலகளவில் 28.3 மில்லியன் உள்நாட்டு இடப் பெயர்வுகளைத் தூண்டியது.
  • பேரழிவு சார்ந்த பல இடப்பெயர்வுகளின் எண்ணிக்கையானது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 40 சதவீதம் அதிகரித்து, 32.6 மில்லியனை எட்டியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்