TNPSC Thervupettagam

உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கை - 2018

December 16 , 2018 2042 days 659 0
  • உலக சுகாதார நிறுவனத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கை 2018 ஆனது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ள பரவலான மாறுபாடுகளைச் சுட்டிக் காட்டியுள்ளது.
  • உலகில் உள்ள 150.8 மில்லியன் வளர்ச்சி குன்றிய (வயதுக்கு குறைந்த உயரம்) 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் இந்தியாவில் வாழ்கின்றனர்.
  • உலகளாவிய அளவில் 5 வயதுக்குட்பட்ட 150.8 மில்லியன் குழந்தைகள் வளர்ச்சி குன்றியும் 50.5 மில்லியன் குழந்தைகள் எடை குன்றியும் காணப்படுகின்றனர்.
  • 46.6 மில்லியனுக்கும் அதிகமான வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. அதனைத் தொடர்ந்து நைஜீரியா (13.9 மில்லியன்) மற்றும் பாகிஸ்தான் (10.7 மில்லியன்) ஆகிய நாடுகள் உள்ளன.
  • 25.5 மில்லியனுக்கும் அதிகமான எடை குன்றிய குழந்தைகளுக்கான பட்டியலில் (உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமை) இந்தியா முதலிடத்திலும் அதனைத் தொடர்ந்து நைஜீரியா (3.4 மில்லியன்) மற்றும் இந்தோனேசியா (3.3 மில்லியன்) ஆகிய நாடுகளும் உள்ளன.
  • உலகில் உள்ள எடை குன்றிய மொத்த குழந்தைகளில் பாதிக்கும் அதிகமானோர் (29.6 மில்லியன்) தெற்காசியாவில் வாழ்கின்றனர்.
  • உலகில் 3 மில்லியன் குழந்தைகள் அதிக எடையுடன் உள்ளனர். அதே வேளையில் 38.9% பெரியவர்கள் அதிக எடை அல்லது பருமனாக உள்ளனர்.
  • வயதுக்கு வந்த பெண்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆண்களை விட அதிக உடல் பருமன் நோய் தாக்கத்தினைக் கொண்டுள்ளனர்.
  • உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கை உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையானது ஊட்டச்சத்து நிலை குறித்த உலகின் முன்னணி அறிக்கையாகும்.
  • 2013-ம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது ஊட்டச்சத்து வளர்ச்சிக்கான முன்முயற்சி உச்சிமாநாட்டைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்