சமீபத்தில் உலகளாவிய ஊதிய அறிக்கை 2018/19-ஆனது சர்வதேச தொழிலாளர் அமைப்பால் (ILO – International Labour Organization) வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையின்படி தெற்காசியாவில் கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் தொழிலாளர்கள் அதிக சராசரியுடைய மெய்யான ஊதிய வளர்ச்சியை (பணவீக்கத்திற்கு ஏற்றவாறு) பெற்றுள்ளனர்
2008-2017 காலகட்டத்தில் தெற்காசிய நாடுகளிலேயே அதிகபட்சமாக இந்தியாவின் உண்மையான ஊதிய வளர்ச்சி 5.5% ஆக இருந்தது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முறையே 34.5% மற்றும் 34% ஆகிய அளவில் ஆடவர் மற்றும் மகளிரின் வருமானத்திற்கிடையே அதிகபட்சமான இடைவெளியைக் கொண்டுள்ளன.