TNPSC Thervupettagam

உலகளாவிய ஊதிய அறிக்கை 2024

December 4 , 2024 19 days 77 0
  • இது சர்வதேச தொழிலாளர் அமைப்பால் வெளியிடப் பட்டது.
  • குறைந்த ஊதியம் பெறும் கூலித் தொழிலாளர்கள் மற்றும் குறைந்த ஊதியம் பெறும் கூலி சாரா தொழிலாளர்களின் பங்கு ஆனது கடந்த 10 ஆண்டு காலப்பகுதியில் ஆண்டிற்கு சராசரியாக 11.1% என்ற வீதத்தில் குறைந்துள்ளது.
  • இந்தியாவில் இது 2008 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 6.3% மற்றும் 12.7% என்ற சராசரி வருடாந்திர விகிதத்தில் குறைந்துள்ளது.
  • நாட்டில் உள்ள சராசரி ஒரு மணி நேர வீத ஊதியத்தில் 50 சதவீதத்திற்கும் குறைவாக ஊதியம் பெறுபவர்கள் என்ற குறைந்த ஊதியம் பெறும் கூலித் தொழிலாளர்களின் பங்கு இந்தியாவில் 9.5% ஆக உள்ளது.
  • அதே சமயம், இது பாகிஸ்தானில் 9.4% ஆகவும், நேபாளத்தில் 10.5% ஆகவும், வங்காள தேசத்தில் 11.2% ஆகவும், பூட்டானில் 13.7% ஆகவும் மற்றும் இலங்கையில் 25.9% ஆகவும் உள்ளது.
  • 2000 ஆம் ஆண்டு முதல், உலகளவில் ஊதியச் சமத்துவமின்மையானது, பல நாடுகளில் ஆண்டுதோறும் சராசரியாக சுமார் 0.5% முதல் 1.7% வரையிலான சராசரி விகிதத்தில் குறைந்துள்ளது.
  • குறைவான வருமானம் கொண்ட பல்வேறு நாடுகளில், கடந்த 20 ஆண்டுகளில் ஊதிய சமத்துவமின்மையின் சராசரி வருடாந்திரக் குறைவு வீதம் 3.2% முதல் 9.6% வரையில் பதிவாகியிருந்தது.
  • கடந்த ஆண்டு உலகளாவிய உண்மையான ஊதியம் ஆனது 1.8% அதிகரித்துள்ளது.
  • இந்தியாவின் வருமானம் ஈட்டும் பிரிவினரில் முதல் சுமார் 10 சதவிகிதத்தினர், கடை நிலையில் உள்ள 10 சதவிகிதத்தினரை விட சுமார் 6.8 மடங்கு மிக அதிகமாக ஊதியம் பெறுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்