TNPSC Thervupettagam

உலகளாவிய எதிர்காலத்திற்கான கல்விக் குறியீடு - 2019

February 21 , 2020 1739 days 649 0
  • பொருளாதார நுண்ணறிவுப் பிரிவானது உலகளாவிய எதிர்காலத்திற்கான கல்விக் குறியீடு – 2019 (Worldwide Education for the Future Index - WEFFI) என்ற ஒரு குறியீட்டை வெளியிட்டுள்ளது.
  • இந்தக் குறியீடானது மாணவர்களைத் திறன் அடிப்படையிலான கல்வியுடன் சேர்ப்பதற்காக நாடுகள் மேற்கொள்ளும் செயல்திறன்களின் அடிப்படையில் நாடுகளை மதிப்பீடு செய்கின்றது.
  • இந்தக் குறியீட்டின் கருப்பொருள், “கொள்கையிலிருந்துப் பயிற்சி வரை” என்பதாகும்.

முக்கிய அம்சங்கள்:

  • இந்தக் குறியீட்டில் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது.
  • இதைத் தொடர்ந்து இந்தக் குறியீட்டில் ஸ்வீடன் இரண்டாவது இடத்திலும் நியூசிலாந்து மூன்றாம் இடத்திலும் உள்ளன.
  • 2019 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தக் குறியீட்டில் இந்தியா 53 மதிப்பெண்களுடன் 35வது இடத்தைப் பிடித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் இந்தக் குறியீட்டில் இந்தியா 40வது இடத்தில் இருந்தது.
  • இந்தக் குறியீட்டில் கென்யா (48வது), நைஜீரியா (49வது) மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு (50 வது) ஆகியவை கடைசி இடங்களில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்