சமீபத்தில், உலகளாவிய எதிர்கால அறிக்கையைப் பின்வரும் உலகளாவிய அமைப்புகள் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ளன.
இயற்கைக்கான உலகளாவிய நிதியம்
உலகளாவிய வர்த்தகப் பகுப்பாய்வு திட்டம் மற்றும்
இயற்கை மூலதன திட்டம்.
அந்த அறிக்கையின்படி, இயற்கையானது மனிதகுலத்திற்கு பின்வருகின்ற ஆறு சுற்றுச்சூழல் அமைப்புகளின் மூலம் சேவைகளை வழங்கியுள்ளது. அவை:
பயிர்களின் மகரந்தச் சேர்க்கை
வெள்ளம் மற்றும் அரிப்புகளிலிருந்து கடற்கரைகளைப் பாதுகாத்தல்
நீர் வழங்கல்
மர உற்பத்தி
கடல் மீன் பிடிப்பு மற்றும்
கார்பன் சேமிப்பு.
மேற்கண்ட ஆறு சுற்றுச்சூழல் அமைப்புகளின் குறைக்கப்பட்ட சேவையானது 2050 ஆம் ஆண்டுக்குள் வருடாந்திர உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.67% வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.