இந்த ஆண்டு உலக ஏற்புத் தினமானது முதன் முறையாக உலகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது.
உலக ஏற்பு (UA) என்பது எழுத்து வடிவம், மொழி அல்லது எழுத்து நீளத்தைப் பொருட் படுத்தாமல் அனைத்துத் தகுதிகளையும் பெற்ற ஊடகப் பெயர்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை உறுதி செய்யும் ஒரு தொழில்நுட்ப அம்சமாகும்.
இதனை அனைத்து இணையம் மூலம் இயக்கப்படும் செயலிகள், சாதனங்கள் மற்றும் அமைப்புகளால் பொதுவாகப் பயன்படுத்த முடியும்.
UA குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காகவும், முக்கியப் பங்குதாரர்கள் மத்தியில் UA ஏற்பினை ஊக்குவிப்பதற்காகவும் உள்நாட்டு, பிராந்திய மற்றும் உலகளாவியச் சமூகங்கள் மற்றும் நிறுவனங்களை ஒன்று திரட்டுவதற்கான வாய்ப்பை இந்த தினம் வழங்குகிறது.