உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆனது 2024 ஆம் ஆண்டிற்கான உலக மீன்பிடி வளம் மற்றும் மீன்வளர்ப்பு நிலை அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் முதன்முறையாக மீன்வளர்ப்பு உற்பத்தியானது கடல்சார் மீன்பிடி வளத்தின் உற்பத்தியை விட விஞ்சியதைக் காட்டுகிறது.
2022 ஆம் ஆண்டில், உலகளாவிய உற்பத்தி 223.2 மில்லியன் மெட்ரிக் டன்களை என்ற சாதனை அளவினை எட்டியது என்ற நிலையில் இது 2020 ஆம் ஆண்டை விட 4.4 சதவீதம் அதிகமாகும்.
ஆசிய நாடுகளானது, அனைத்து நீர்வாழ் விலங்குகளில் 70 சதவீதத்தினை உற்பத்தி செய்கின்றன.
2022 ஆம் ஆண்டில் மாபெரும் அளவிலான கடல்சார் மீன்பிடிப்பானது 92.3 மெட்ரிக் டன்கள், மற்றும் நீர்வாழ் விலங்குகள் 91.0 மெட்ரிக் டன்கள், 1.3 மெட்ரிக் டன்கள் பாசிகள் போன்றவற்றை உற்பத்தி செய்தது.
மீன்பிடி உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது (14.3 சதவீதம்), அதைத் தொடர்ந்து இந்தோனேசியா (8.0 சதவீதம்) மற்றும் இந்தியா (6.0 சதவீதம்) ஆகியவை இடம் பெற்று உள்ளன.
2032 ஆம் ஆண்டில் நீர்வாழ் விலங்குகளின் உற்பத்தி 10 சதவீதம் அதிகரிக்கும் என எதிர் பார்க்கப் படுகிறது.