TNPSC Thervupettagam

உலகளாவிய கண் பராமரிப்பு சேவை

February 6 , 2018 2483 days 837 0
  • தன்னுடைய குடிமக்களுக்கு உலகளாவிய கண் சிகிச்சை பராமரிப்பு சேவையை (Universal Eye Care) வழங்கவுள்ள உலகின் முதல் குறைந்த வருவாயுடைய நாடாக (Low income Country) ருவாண்டா உருவாகியுள்ளது.
  • இதற்காக நாட்டில் உள்ள 3000 கண் சிகிச்சை செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்க “விஷன் ஃபார் எ நேஷன்“ (Vision for a Nation) என்ற அமைப்புடன் ருவாண்டா ஒப்பந்தம் செய்துள்ளது.
  • சிறு கண்சார் பாதிப்புகளின் அறிகுறிகள் முதல் பெரிய கண்சார் அறுவை சிகிச்சை வரை இந்த உலகளாவிய கண் சிகிச்சை சேவையில் வழங்கப்பட உள்ளது.
  • இதனால் ருவாண்டாவில் உள்ள 34 சதவீத மக்கள் பயன் பெற உள்ளனர்.
  • கிட்டப் பார்வையானது ருவாண்டாவில் நிலவும் பொதுவான கண்சார் பார்வை குறைபாடாகும்.
  • உலக மனித வளர்ச்சிக் குறியீட்டில் (Human Development Index) ருவாண்டா 159வது இடத்தில் உள்ளது.
  • ருவாண்டாவில் வெறும்8 சதவீத மக்கள் மட்டும் மின்சார பயன்பாட்டை கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்