தன்னுடைய குடிமக்களுக்கு உலகளாவிய கண் சிகிச்சை பராமரிப்பு சேவையை (Universal Eye Care) வழங்கவுள்ள உலகின் முதல் குறைந்த வருவாயுடைய நாடாக (Low income Country) ருவாண்டா உருவாகியுள்ளது.
இதற்காக நாட்டில் உள்ள 3000 கண் சிகிச்சை செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்க “விஷன் ஃபார் எ நேஷன்“ (Vision for a Nation) என்ற அமைப்புடன் ருவாண்டா ஒப்பந்தம் செய்துள்ளது.
சிறு கண்சார் பாதிப்புகளின் அறிகுறிகள் முதல் பெரிய கண்சார் அறுவை சிகிச்சை வரை இந்த உலகளாவிய கண் சிகிச்சை சேவையில் வழங்கப்பட உள்ளது.
இதனால் ருவாண்டாவில் உள்ள 34 சதவீத மக்கள் பயன் பெற உள்ளனர்.
கிட்டப் பார்வையானது ருவாண்டாவில் நிலவும் பொதுவான கண்சார் பார்வை குறைபாடாகும்.
உலக மனித வளர்ச்சிக் குறியீட்டில் (Human Development Index) ருவாண்டா 159வது இடத்தில் உள்ளது.
ருவாண்டாவில் வெறும்8 சதவீத மக்கள் மட்டும் மின்சார பயன்பாட்டை கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.