உலகளாவிய கார்பன் திட்டமானது (Global Carbon Project - GCP) 2019 ஆம் ஆண்டிற்கான ‘உலகளாவிய கார்பன் அளவுநிலை’ (பட்ஜெட்) என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட GCP ஆனது அதிக அளவில் உள்ள 3 பசுமை இல்ல வாயுக்களுக்கான உலகளாவிய அளவு நிலைகளை வெளியிடும் ஒரு அமைப்பாகும். அவையாவன
கார்பன் டை ஆக்சைடு
மீத்தேன்
நைட்ரஸ் ஆக்சைடு
2019 ஆம் ஆண்டில் வளிமண்டல CO2ன் செறிவானது தொழில்துறைப் புரட்சிக்கு முந்தைய நிலைகளை விட 47% அதிகமாக இருக்கின்றது.
புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் தொழில் துறையிலிருந்து உலகளாவிய CO2 உமிழ்வுகள் 1960 ஆம் ஆண்டுகளில் இருந்து ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறையும் அதிகரித்து வருகின்றது.
2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் உமிழ்வானது (2.6 பில்லியன் டன் அல்லது ஜிகாடன்கள்) 2018 ஆம் ஆண்டில் இருந்ததை விட 1.8 சதவீதம் மட்டுமே அதிகமாக இருக்கும்.
உமிழ்வு வீதங்களின் மெதுவான அதிகரிப்பானது பொருளாதாரத்தின் மிகவும் மெதுவான வளர்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.