TNPSC Thervupettagam

உலகளாவிய கார்பன் திட்ட அறிக்கை

January 23 , 2024 178 days 248 0
  • புதைபடிவ எரிபொருட்களிலிருந்து வெளிவரும் உலகளாவிய கார்பன் உமிழ்வு ஆனது எப்போதும் இல்லாத உச்ச அளவினை எட்டியுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் எண்ணெய்ப் பயன்பாட்டிலிருந்து வெளியான உலகளாவிய உமிழ்வு ஆனது மிகவும் அதிகளவில் உயரும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் 36.8 பில்லியன் டன்கள் புதைபடிவ கார்பன் டை ஆக்சைடு (CO2) உமிழ்வு பதிவாகியுள்ளதாகவும், இது 2022 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 1.1 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் இந்த வருடாந்திர அறிக்கை குறிப்பிடுகிறது.
  • "நிலக்கரி (1.1 சதவிகிதம்), எண்ணெய் (1.5 சதவிகிதம்) மற்றும் எரிவாயு (0.5 சதவிகிதம்) ஆகியவற்றில் இருந்து வெளிவரும் உலகளாவிய உமிழ்வுகள் அனைத்தும் அதிகரிக்கும்" என்று அறிக்கை கூறியுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் (2022 ஆம் ஆண்டை விட) இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் உமிழ்வு அதிகரிப்பானது எட்டு சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று இந்த அறிக்கை கூறியுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2023 ஆம் ஆண்டில், இந்தியாவில் 8.2 சதவீதமும், சீனாவில் 4.0 சதவீதமும் உமிழ்வு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டது.
  • அதே நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தில் 7.4 சதவீதமும், அமெரிக்காவில் 3.0 சதவீதமும் உலகின் பிற பகுதிகளில் 0.4 சதவீதமும் சரிவானது பதிவானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்