TNPSC Thervupettagam

உலகளாவிய காலநிலை அபாயக் குறியீடு - இந்தியா 5வது இடம்

December 7 , 2019 1688 days 699 0
  • சுற்றுச்சூழல் சார்ந்த கொள்கை வகுக்கும் குழுவான “ஜெர்மன்வாட்ச்” என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி, காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
  • 2020 ஆம் ஆண்டின் காலநிலை அபாயக் குறியீட்டில், இந்தியாவின் தரவரிசையானது 2017 ஆம் ஆண்டில் 14வது இடத்திலிருந்து 2018 ஆம் ஆண்டில் 5வது இடத்திற்குச் சென்றுள்ளது.
  • காலநிலை மாற்றத்தால் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளையும் இந்தியா பதிவு செய்துள்ளது.
  • மேலும் 2018 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் இரண்டாவது அதிகபட்ச நிதி இழப்புகளையும் இந்தியா சந்தித்துள்ளது.
  • ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவை 2018 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மூன்று நாடுகளாகும்.
  • ஜெர்மனியில் உள்ள “ஜெர்மன்வாட்ச்” என்பது நீடித்த உலகளாவிய வளர்ச்சிக்குப் பணியாற்றும் ஒரு சுயாதீனமான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்