TNPSC Thervupettagam

உலகளாவிய காலநிலை அபாய அட்டவணை 2019

December 7 , 2018 2182 days 683 0
  • போலந்தின் கடோவைஸ் நகரில் நடைபெற்ற காலநிலைக்கான வருடாந்திரக் கூடுகையில் உலகளாவிய காலநிலை அபாய அட்டவணை 2019-ன் 14-வது பதிப்பு வெளியிடப்பட்டது.
  • இது ஜெர்மனியில் உள்ள பான் நகரத்தினை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச நிறுவனமான ஜெர்மன் வாட்ச் என்பதின் உலகளாவிய அளவிலான ஆழ்ந்த பகுப்பாய்வு ஆகும்.
  • இது தீவிர வானிலை நிகழ்வுகளின் தாக்கங்களை உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகள் ஆகிய இரண்டின் அடிப்படையிலும் அளவிடுகிறது.
  • இந்த அறிக்கையின்படி, 2017 ஆம் ஆண்டில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் புவர்ட்டோ ரிக்கோ, இலங்கை, டொமினிக்கா ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன.
  • இந்தியா 14-வது மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடாக தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளது.
  • கடந்த ஆண்டு தீவிர பருவநிலை நிகழ்வுகளால் ஏற்பட்ட 29% உயிரிழப்புகள் உயர்வுடன் உலகிலேயே இரண்டாவது அதிக இறப்புகளைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
  • 1998 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் புவர்ட்டோ ரிக்கோ, ஹோண்டுராஸ் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகள் தீவிர பருவநிலை நிகழ்வுகளால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளாக உள்ளன.
  • நேபாளம் (4), வங்காள தேசம் (9) மற்றும் இந்தியா (14) ஆகிய நாடுகளில் பெரும் மழைப்பொழிவால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 40 மில்லியனுக்கும் அதிகமான மக்களை அது பாதித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்