உலக வானிலை அமைப்பானது (WMO) இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2011-2020 தசாப்த காலமானது நிலம் மற்றும் கடல் ஆகிய இரண்டிற்கும் மிகவும் வெப்பமான காலமாக பதிவு செய்யப்பட்டு வெளிப்பட்டது.
உலகளாவியச் சராசரி வெப்பநிலை என்பது 1850-1900 காலச் சராசரியை விட 1.10 ± 0.12 °C அளவிற்கு உயர்ந்தது.
2016 ஆம் ஆண்டு (எல் நினோ நிகழ்வின் காரணமாக) மற்றும் 2020 ஆம் ஆண்டு ஆகியவை வெப்பமான ஆண்டுகளாக தனித்து நிற்கின்றன.
CO2 (கரிம வாயு) உமிழ்வு 2020 ஆம் ஆண்டு 413.2 ppm (ஒரு மில்லியனிற்கு எவ்வளவு துகள்) என்ற அளவினை எட்டியது.
கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிக் பனிக்கட்டிகள் 2001-2010 கால அளவுடன் ஒப்பிடும் போது 38% அளவிற்கு அதிகப் பனி அளவினை இழந்துள்ளன.
அண்டார்டிக் ஓசோன் துளையானது 2011-2020 ஆம் ஆண்டு காலக் கட்டத்தில் குறைந்து விட்டதால் அது மாண்ட்ரீயல் நெறிமுறையின் கீழ் வெற்றிகரமான சர்வதேச நடவடிக்கைக்களுக்கான வரவாக வைக்கப்பட்டுள்ளது.