உலகளாவிய ஈர நில கண்ணோட்ட அறிக்கையானது ராம்சார் சதுப்புநில உடன்படிக்கையினால் வெளியிடப்பட்ட முதலாவது சதுப்புநிலம் குறித்த அறிக்கை ஆகும்..
இந்த அறிக்கையின்படி
1970 - 2015 ஆகியவற்றின் இடைப்பட்ட 45 ஆண்டு கால அளவில் உலகின் 35% சதுப்பு நிலங்கள் அழிந்துவிட்டன.
வருடாந்திர சராசரி ஈர நில இழப்பானது 0.78% என்ற அளவில் உள்ளது. இது எதிர்காலத்தில் கடுமையான விளைவுகளை அளிக்கும்.
1990 - 2015க்கு இடைப்பட்ட கால அளவில் சராசரி வருடாந்திர இழப்பு வீதத்தை விட 3 மடங்கு வேகத்தில் வருடத்திற்கு 0.24% அளவிற்கு நீர் விநியோகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அளவிற்கு ஈர நிலங்கள் குறைந்துள்ளன.
80% க்கும் அதிகமான அளவில் கழிவுநீர்கள் போதிய அளவுக்கு சுத்திகரிக்கப்படாமல் சதுப்பு நிலங்களில் வெளியிடப்படுகின்றன.
சதுப்பு நிலங்கள் குறைவதற்கான காரணங்களாவன
காலநிலை மாற்றம், மக்கள்தொகை பெருக்கம், நகர்மயமாதல் (குறிப்பாக கடற்கரை மண்டலங்கள் மற்றும் ஆற்றுச் சமவெளிப் பகுதிகள்).
நுகர்வு முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் விவசாயம் மற்றும் நிலம் மற்றும் நீர் ஆகியவற்றை பயன்படுத்துவதில் ஏற்பட்ட மாற்றங்கள்.