TNPSC Thervupettagam

உலகளாவிய சமூக இயங்குதிறன் குறியீடு

January 22 , 2020 1677 days 716 0
  • உலகப் பொருளாதார மன்றமானது சமூக இயங்குதிறன் குறியீட்டை வெளியிட்டு உள்ளது.
  • இந்தக் குறியீடானது உலகெங்கிலும் உள்ள மக்களின் சமூக இயங்குதிறனை அளவிடுகின்றது.
  • சமூக இயங்குதிறன் என்பது ஒரு நபரின் தனிப்பட்டச் சூழ்நிலைகளில் அவரது பெற்றோர்களுடன் ஒப்பிடும் போது அவருக்கு ஏற்படும் ஏற்றம் அல்லது இறக்கம் போன்ற  ஒரு சூழ்நிலையாகும்.
  • நாடுகளின் சமூக இயங்குதிறனானது பின்வரும் 5 முக்கியப் பரிமாணங்களின் அடிப்படையில் அளவிடப்பட்டுள்ளது. அவையாவன
    • சுகாதாரம்,
    • கல்வி - தரம், அணுகல் மற்றும் சமத்துவம்,
    • தொழில்நுட்பம்,
    • பணி - ஊதியங்கள், நிபந்தனைகள் மற்றும் வாய்ப்புகள்,
    • பாதுகாப்பு மற்றும் நிறுவனங்கள் - உள்ளடக்கிய நிறுவனங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு.
  • ஒப்பீட்டுச் சமூக இயக்கம் என்பது ஒரு நபரின் வாழ்க்கையில் உள்ள சமூக - பொருளாதார பின்னணியின் விளைவை மதிப்பிடுவதாகும்.
  • இந்த அறிக்கையின் படி, இந்தக் குறியீட்டில் டென்மார்க் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து இந்தக் குறியீட்டில் பின்லாந்து, நார்வே, சுவீடன் மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.
  • இந்த அறிக்கையில் மொத்தமுள்ள 82 நாடுகளில் இந்தியா 76வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்