உலகளாவிய சாலைப் பாதுகாப்பு நிலை குறித்த அறிக்கை 2023
December 18 , 2023 342 days 264 0
2010 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் உலகளவில் ஆண்டுதோறும் ஏற்படும் சாலைப் போக்குவரத்து சார்ந்த உயிரிழப்புகள் 5% குறைந்து 1.19 மில்லியன் இறப்புகள் ஆக உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 108 உறுப்பினர் நாடுகளில் இந்த வீதத்தில் சரிவு பதிவாகி உள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் இறப்புகள் 15% அதிகரித்துள்ளன.
இந்தியாவில், 2010 ஆம் ஆண்டில் 1.34 லட்சமாக இருந்த சாலைப் போக்குவரத்து இறப்புகளின் மொத்த எண்ணிக்கையானது 2021 ஆம் ஆண்டில் 1.54 லட்சமாக உயர்ந்து உள்ளது.
பத்து நாடுகள் சாலைப் போக்குவரத்து இறப்புகளை 50%க்கும் மேல் குறைப்பதில் வெற்றி பெற்றுள்ளன.
மேலும் முப்பத்தைந்து நாடுகள், சாலைப் போக்குவரத்து இறப்புகளை 30% முதல் 50% வரை குறைத்ததன் மூலம், இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளன.
அனைத்து வயதினரில் ஏற்படும் உயிரிழப்பினைக் கருத்தில் கொள்ளும்போது சாலை விபத்து மரணத்திற்கான 12வது முக்கிய காரணமாகும்.
2010 ஆம் ஆண்டில் 1 லட்சம் பேருக்கு 18 ஆக இருந்த சாலை விபத்து சார்ந்த இறப்பு விகிதம் ஆனது 2021 ஆம் ஆண்டில் 1 லட்சத்திற்கு 15 ஆகக் குறைந்துள்ள நிலையில், இது 2010 ஆம் ஆண்டு முதல் சாலைப் போக்குவரத்து இறப்பு விகிதத்தில் பதிவான 16% சரிவைக் குறிக்கிறது.