TNPSC Thervupettagam

உலகளாவிய சிறந்த 100 பிராண்டுகள் 2018- அறிக்கை

October 8 , 2018 2242 days 700 0
  • உலகளாவிய பொருள்களுக்கான ஆலோசனை நிறுவனமான இன்டர்பிராண்ட்ஸின் “உலகளாவிய சிறந்த 100 பிராண்டுகள் 2018” அறிக்கையின்படி, 2018 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த பிராண்டாக கூகுள் நிறுவனத்தை பின்தள்ளி ஆப்பிளானது முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • முகநூலானது தரவுமீறல் சிக்கல்களில் ஆழ்ந்துள்ள நிலையில் உலகளாவிய 100 பிராண்டுகளில் 9-வது இடத்தில் உள்ளது.
  • அமேசான் 56% வளர்ச்சியைப் பெற்று உலகளவில் 3-வது பிராண்டாக உள்ளது.
  • இந்த அறிக்கையின்படி ஆப்பிளின் பிராண்ட் மதிப்பானது 16% உயர்ந்து (ஆண்டில்) 214.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
  • அமெரிக்காவில் $1 ட்ரில்லியன் சந்தைத் திறனையடைந்த முதல் நிறுவனமாக ஆப்பிள் மாறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்