TNPSC Thervupettagam

உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்புக் குறியீடு – 2019

February 23 , 2020 1737 days 685 0
  • உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்புக் குறியீடு (Global Health Security - GHS) என்பது 195 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் அது தொடர்புடைய திறன்களின் முதலாவது விரிவான மதிப்பீடாகும்.
  • GHS குறியீடு ஆனது ஆறு பிரிவுகள், 34 குறிகாட்டிகள் மற்றும் 85 துணைக் குறிகாட்டிகளைக் கொண்டு நாடுகளின் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் திறன்களை மதிப்பிடுகின்றது.
  • நோய்த் தடுப்பு, நோயை முன்கூட்டியே கண்டறிதல், விரைவான பதிலெதிர்ப்பு, சுகாதார அமைப்பின் தரம், தரநிலைகள் மற்றும் இடர்பாட்டுச் சூழல் ஆகியவை இந்த ஆறு பிரிவுகளாகும்.
  • இந்தக் குறியீட்டில், மொத்தமுள்ள 195 நாடுகளில் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 46.5 மதிப்பெண்களுடன் இந்தியா 57வது இடத்தில் உள்ளது.
  • இந்தக் குறியீட்டில் உலகளவில் அமெரிக்கா முதலிடத்திலும் ஐக்கிய இராஜ்ஜியம் இரண்டாவது இடத்திலும் நெதர்லாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன.
  • அண்மையில் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டிருக்கும் சீனா இந்தக் குறியீட்டில் 51வது இடத்தில் உள்ளது.
  • வட கொரியா, சோமாலியா மற்றும் கினியா ஆகியவை இந்தக் குறியீட்டின் கடைசி இடங்களில் பட்டியலிடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்