ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உலகளாவிய சுகாதார பாதுகாப்பு தினம் டிசம்பர் 11ஆம் தேதி (Universal Health Coverage Day) கொண்டாடப்படுகின்றது.
உலகின் அனைத்துப் பகுதிகளிலும், அனைத்து மக்களுக்கும் மலிவான, தரமுடைய சுகாதார சேவைகளை உலக நாடுகள் வழங்குவதற்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா.அமைப்பின் முதல் ஒருமனதான சுகாதார தீர்மானத்தின் ஆண்டு அனுசரிப்பே உலகளாவிய சுகாதார பாதுகாப்பு தினமாகும்.
நிதிச் சுமைகள் இன்றி, தங்களுக்கு வேண்டிய தரமுடைய சுகாதாரமான ஆரோக்கிய சேவைகளை அனைத்து மக்களும் அணுகும் நிலையே உலக சுகாதார பாதுகாப்பு ஆகும்.
உலகளாவிய சுகாதார பாதுபாப்பு ஆனது ஐ.நா அவையால் புதிய நீடித்த வளர்ச்சி இலக்குகளுள் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது.