TNPSC Thervupettagam

உலகளாவிய தூசு உமிழ்வுகளில் மனித நடவடிக்கைகளின் தாக்கம்

December 28 , 2023 204 days 204 0
  • உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆனது, “மணல் மற்றும் தூசுப் புயல்கள்: வேளாண்மையில் தணிப்பு, ஏற்பு, கொள்கை மற்றும் இடர் மேலாண்மை நடவடிக்கைகளுக்கான வழிகாட்டி” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • வேளாண்மையானது ஒரு முக்கிய மனித நடவடிக்கை சார்ந்த காரணியாக இருப்பதோடு, மனித நடவடிக்கைகள் உலகளாவிய தூசு உமிழ்வுகளில் 25 சதவீதத்தை பங்களிக்கின்றன.
  • ஒவ்வோர் ஆண்டும், இரண்டு பில்லியன் டன்களுக்கும் அதிகமான மணல் மற்றும் தூசுகள் பூமியின் வளிமண்டலத்தில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு மேல் பயணிக்கின்றன.
  • மணல் மற்றும் தூசுப் புயல்கள் என்பது சிறிய துகள்களின் குழுமத்தை மிக அதிக உயரத்திற்கு கொண்டுச் செல்லும் வலுவான மற்றும் சுழல் காற்று என்று குறிப்பிடப் படுகின்ற ஒரு வானிலை நிகழ்வு ஆகும்.
  • அவை மனித ஆரோக்கியம், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது.
  • மணல் மற்றும் தூசுப் புயல்கள் 17 நிலையான மேம்பாட்டு இலக்குகளில் 11 இலக்குகளை அடைவதில் ஒரு வலுவான சவாலை ஏற்படுத்துகின்றன.
  • நிலப்பயன்பாட்டில் மாற்றம், வேளாண்மை, நீர் வழிகளின் திசைமாற்றம் மற்றும் காடழிப்பு போன்ற மானுடவியல் சார்ந்த காரணிகள் 25 சதவீதத்திற்கு பங்களிக்கச் செய்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்