ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையமானது (UNHCR) 2025 ஆம் ஆண்டிற்கான 10 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு நிதிக் கோரல் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான அகதிகள், புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் நாடற்ற மக்களுக்கு அவசியமானத் தேவைகளைப் பூர்த்தி செய்வதையும், நிலையான தீர்வுகளைச் செயல்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான அறிக்கையின்படி, உலகளவில் சுமார் 117.3 மில்லியன் மக்கள் வலுக்கட்டாயமாக புலம்பெயர்ந்துள்ளனர் என்பதோடு அவர்களில் சுமார் 40% பேர் குழந்தைகள் ஆவர்.