TNPSC Thervupettagam

உலகளாவிய நெகிழி மாசுபாட்டில் முன்னணியில் உள்ள நாடு

September 13 , 2024 74 days 105 0
  • ஆண்டிற்கு சுமார் 9.3 மில்லியன் மெட்ரிக் டன்கள் (Mt) அளவு உமிழ்வுடன் உலகளாவிய நெகிழி உமிழ்வுகளில் இந்தியா ஐந்தில் ஒரு பங்கினைக் கொண்டுள்ளது.
  • உலகளாவிய நெகிழி உமிழ்வில் இந்தியாவிற்கு அடுத்தபடியாக, நைஜீரியா மற்றும் இந்தோனேஷியா ஆகியவை முறையே 3.5 மெட்ரிக் மற்றும் 3.4 மெட்ரிக் டன்களுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.
  • இந்தியாவின் அதிகாரப்பூர்வ நெகிழிக் கழிவு உற்பத்தி விகிதம் ஆனது ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 0.12 கிலோகிராம் ஆகும்.
  • இதற்கு முன், உலக அளவில் அதிக மாசு உண்டாக்கும் நாடுகளில் சீனா முதலிடத்தில் இருந்தது, ஆனால் தற்போது அந்தத் தரவரிசையில் சீனா நான்காவது இடத்திற்கு தள்ளப் பட்டுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய நெகிழிக் கழிவு உமிழ்வு ஆனது 52.1 மெட்ரிக் டன்னை எட்டியது.
  • குறிப்பிடத்தக்க வகையில், உலகளாவிய நெகிழிக் கழிவு உமிழ்வுகளில் 69% அல்லது ஆண்டிற்கு 35.7 மெட்ரிக் டன் உமிழ்வானது 20 நாடுகளில் இருந்து உருவாகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்